வரலாறு சிறப்பு மிக்க வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

வரலாறு சிறப்பு மிக்க வெற்றியை மக்கள் அளித்துள்ளனர் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

Update: 2024-06-05 03:47 GMT

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா 

கோவை மக்களவை தொகுதியில் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 068 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி வெற்றி பெற்றதை தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரி கிராந்தி குமார் பாடி கணபதி ராஜ்குமாருக்கு வழங்கினார். அப்பொழுது அவருடன் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சான்றிதழ் பெற்றவுடன் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது திமுக தலைவர் பொறுப்பேற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார் எனவும் அவரது திறனுக்கும் உழைப்பிற்கும் மக்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் வெற்றியை கொடுத்து இருக்கின்றனர் என தெரிவித்தார்.கோவை மண்ணில் 28 ஆண்டுகளுக்கு பின்பு திமுக மக்களவை உறுப்பினரை கொடுத்து இருக்கின்றனர் எனவும் இதற்கும காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் உழைப்பு,உதயநிதி அவர்களின் சூறாவளி பிரச்சாரம் காரணம் எனவும் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை மக்கள் கொடுத்து இருக்கின்றனர் என தெரிவித்தார்.வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்த அவர் இந்த வெற்றியை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் திமுக மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் செயல்படுவார் என்றவர் இது மகத்தான வெற்றி என தெரிவித்தார்

.இனி வரும் காலங்களில் கோவை பார்க்காத வளர்ச்சியை காணும் எனவும் அதற்கு உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்தார்.தாய்மார்களுக்கு பல திட்டங்களை திமுக அரசு கொடுத்து இருப்பதால் அவர்கள் ஆதரவினை அளித்துள்ளனர் எனவும்,தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றபடும் என என்றார்.விமான நிலைய விரிவாக்கம்,தொழில் வளர்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவோம் எனவும் கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார். 3 ஆண்டு காலம் திமுக தலைவர் செய்த சாதனைகள் திட்டங்கள் ஆகியவற்றிக்கு கிடைத்த வெற்றி இது எனவும் கோவை மண்ணில் 28 ஆண்டுகளுக்கு பின்பு திமுக மக்களவை உறுப்பினர் கொடுத்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். திமுக தலைவர் நாகரீக அரசியலை விரும்புவவர் என்றும் இந்த வெறுப்பு அரசியலை விரட்டி வளர்ச்சிக்கான வாக்குகாளாக இதை பார்க்க வேண்டும் எனவும் இனியாவது வெறுப்பு அரசியலை ஒதுக்கி செயல்படுவார்கள் என நினைக்கின்றேன் என தெரிவித்தார்.

விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக மக்களின் பணத்தில் வாங்கி அதை தனியாருக்கு தாரை வார்ப்பது சரியல்ல என்ற அவர் எங்களின் இந்த கோரிக்கை நியாயமானது எனவும் விமான நிலைய விரிவாக்கம் எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்கு தெரியும் என்றார்.விமான நிலைய விரிவாக்க திட்டத்தில் கவனம் செலுத்தும் படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

Tags:    

Similar News