சேலம் அருகே கிராம திடீர் போராட்டத்தில் குதித்த மக்கள்

சேலம் அருகே கிராம நிர்வாக அலுவலரை மாற்றக்கூடாது திடீர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-02-01 16:49 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 

சேலம் மாவட்டம்  சங்ககிரி வட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தப்பக்குட்டை கிராமத்தில் சிதம்பரம் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் கருத்து வேறுபாடு நிலவியதால் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அளித்த புகாரின் பேரில் கிராம நிர்வாக அலுவலரை வருவாய்த்துறை அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்துள்ளனர்.

Advertisement

இதனை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் தங்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து தரும் கிராம நிர்வாக அலுவலர் எங்களது கிராமத்தில் இருந்து பணியிடம் மாற்றம் செய்யக்கூடாது என கூறி தப்பக்குட்டை கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகவல் அறிந்து வந்த மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். கிராம நிர்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News