இயற்கை பானத்தை விரும்பும் பொதுமக்கள்
கோடை வெயில் சுட்டெரிப்பதால் இயற்கை பானத்தை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர்;
Update: 2024-03-21 01:59 GMT
இயற்கை பானம்
தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ,உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் இயற்கை பானங்கள் பக்கம் பொதுமக்கள் கவனம் திரும்பி உள்ளது. பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில் சாலையோரம் விற்பனை செய்யப்படும், இயற்கை பானமான பதநீர் மற்றும் நுங்கு ஆகியவை உடல் சூட்டை குறைக்கும் என்பதால், பொதுமக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். ஏப்ரல் மாத துவக்கத்தில் சீசன் நெருங்குவதால் அதிகளவு நுங்கு இறக்குமதி செய்யப்படும் என கடை வியாபாரி தெரிவித்தார்.