பாதுகாப்பு இல்லாத நிலையில் சென்னை மக்கள் - முன்னாள் அமைச்சர்

Update: 2023-12-07 01:21 GMT
 முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திர பாலாஜி 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் அல்லம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி,தற்போது சென்னையில் பெய்த மழையை விட மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த போது சென்னையில் அதிக மழை பெய்தது, அந்த மழையை சமாளித்தவர் ஜெயலலிதா என்றார். தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது 2015 ஆம் ஆண்டு தமிழக வரலாற்றில் முதல் முறையாக 48 சென்டிமீட்டர் மழை பெய்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டதாகவும், ஆனால் தற்போது சில இடங்களில் 2015 ஆம் ஆண்டு விட குறைந்த அளவு மழை பெய்து இருப்பினும் சென்னை மழை வெள்ளத்தில் மிதப்பதாக விமர்சனம் செய்த கே.டி இராஜேந்திர பாலாஜி இதற்கு காரணம் நிர்வாக திறமையற்ற ஆட்சி என்றார்.

மேலும் நிர்வாக திறமையற்ற திமுக அரசால் சென்னையில் உள்ள மழை நீர் வடிகால்களை சீரமைக்காத காரணத்தினாலும் கழிவு நீர் கால் வாய்களையும் சரி செய்யாத காரணத்தினாலும் சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள மக்களும் பெரும் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் இது போன்ற பேரிடர் காலத்தில் விளம்பரத்திற்காக உத்தரவினை இட்டு செயல்படுத்தி வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.

மேலும் தற்போது தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சியானது எங்கிருந்தோ பேட்டி கொடுக்கிற அரசாங்கம் எனவும் கோட்டையில் உட்கார்ந்து கொண்டும் வீடுகளில் அமர்ந்து கொண்டும் பேட்டி அளித்துக் கொண்டிருக்கின்றனர். வீதியில் இறங்கி மக்களிடம் நேரடியாக சென்று நிவாரணம் வழங்கவில்லை என குற்றம் சாட்டினார். சென்னையை சுற்றியும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகவும் காட்சியளித்து வருகிறது. தண்ணீருடன் சேர்ந்து முதலையும், பாம்பு போன்றவை நடமாடி கொண்டிருக்கின்றது என்றார்.

மேலும் எந்த ஒரு காலத்திலும் இந்த மாதிரியான காட்சிகள் பார்த்ததே இல்லை எனவும் என விமர்சனம் செய்தார். தற்போது நடைபெறும் திமுக ஆட்சியானது மக்களுக்கான ஆட்சியாக இல்லை என குற்றம் சாட்டினார்.ஆனால் எடப்பாடி பழனிச்சாமி காஜ புயல் பாதிப்பை எந்த சுவடும் இல்லாமல் மாற்றியவர் என்றார். மேலும் இந்த மாதிரியான நிலைமைகள் மாற வேண்டும் என்றால் தமிழகத்தில் ஆட்சி மாற வேண்டும் என்றார்.

Tags:    

Similar News