ராமநாதபுரம் மக்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் புகார் !

ராமநாதபுரம் கமுதி அருகே கிராமத்திற்குள் புகுந்து ஆடு திருட வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் புகார்.

Update: 2024-03-20 07:08 GMT

 புகார்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்பதும் இப்பகுதி மக்கள் தொழில் ஆகும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இரண்டு பேர் ஊருக்குள் புகுந்து ஆடுகளை திருடுவதற்கு முயற்சி செய்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்ட போது ஒருவர் தப்பியோடியதால், மற்றொரு நபரை மட்டும் பிடித்துள்ளனர்.பின்னர் கமுதி போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில்போலீசார் விசாரணை செய்து, பிடிபட்ட நபரான அம்மன்பட்டியை சேர்ந்த பிரித்திவிராஜ்  (27) காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர். பின்னர் போலீசார் தப்பியோடிய மற்றொரு நபரான மூலக்கரைப்பட்டி சேர்ந்தசரவணன்(23) என்ற நபரையும் பிடித்தனர். தலைவநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து அளித்த புகாரின் பேரில், ஆடு திருட முயற்சித்த இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரை யும் கைது செய்தனர். மேலும் கமுதி - அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் இருந்து 5 கி.மீ கிராமச் சாலையில் சென்றால் தான் இக்கிராமத்திற்கு செல்ல முடியும். எனவே இரவு நேரங்களில் மற்ற பணிகளுக்குச் சென்று வீடு திரும்புவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், எனவே தலைவ நாயக்கன்பட்டி விலக்கு சாலை பகுதியில் காவல் நிலையம் அமைத்து போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News