குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லூரிசாலை, எஸ்வி காலனி, பாரதி நகர்,போயம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பல்லாங்குழி சாலையால் பொதுமக்கள் அவதி. புழுதியால் சுவாச பிரச்சனை ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2024-01-22 02:00 GMT

திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட கல்லூரி சாலை, எஸ்.வி.காலனி, பாரதி நகர், போயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக கல்லூரி சாலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கப்பட்ட சாலை தற்பொழுது குண்டும் குழியுமாக சேதமாகி உள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரி, மேலும் அதிகளவிலான குடியிருப்புகளும் நிறுவனங்களும் உள்ள பகுதியாக உள்ளது. எப்பொழுதும் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக காணப்படுகிறது,

குறிப்பாக, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு செல்லும் பொழுது மிகவும் சிரமப்படுவதாகவும் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் தெரிவித்தனர், அதேபோன்று அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் சேதமாகியுள்ள சாலையால் புழுதிகள் பறந்து சுவாசப் பிரச்சனை ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர். எனவே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தினர் இதன் அவசியத்தை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் தரமான சாலையை அமைத்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News