அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

Update: 2024-03-01 13:29 GMT
 சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் 54 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளது.இதில் ஆனையூர்,தேவர்குளம், சாமிநத்தம்,செங்கமல நாச்சியார்புரம்,பள்ளப்பட்டி, நாரணாபுரம்,விஸ்வநத்தம், சித்துராஜபுரம்,பூலாவூரணி ஆகிய பஞ்சாயத்துக்களில் அதிகளவில் மக்கள் வசித்து வருகிறார்கள்.இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடங்களில் நாளுக்கு நாள் புதிய குடியிருப்புகள் பல கட்டப்பட்ட வருகிறது.

ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட பலபகுதிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகரப்பகுதியில் போதிய இடம் இல்லாத நிலையில் பொது மக்கள் அருகிலுள்ள பஞ்சாயத்து பகுதிகளில் இடம் வாங்கி வீடு மற்றும் தொழிற்சாலைகளை கட்டி வருகிறார்கள். ஆனால் பல பகுதிகளில் பொதுமக்கள் சென்று வர சாலை வசதி,மின் விளக்கு,குடிநீர் வசதிகள் செய்து கொடுக்ககப்படாததால் பொது மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மக்கள் தொடர்ந்து கிராமசபை கூட்டங்களிலும் வலியுறுத்தியும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாத நிலை தொடர்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் சேவை ஆற்ற தலைவர், கவுன்சிலர்களுக்கு இன்னும் சில மாதம் பதவி காலம் உள்ளது.அதற்குள் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News