அருந்ததியர் காலணியில் நீரோடையை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
Update: 2023-12-23 10:52 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் பகுதியில் அருந்ததியர் காலனி உள்ளது இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக அருந்ததியர் காலனியை ஒட்டியுள்ள நீரோடை பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க நகர் பகுதிக்கு செல்ல முடியவில்லை எனவும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் சிரமப்பட்டு ஆபத்தான முறையில் கரையை கடந்து செல்வதாகவும் இது குறித்து பலமுறை முதலமைச்சர் தனி பிரிவிற்கு மனு அளித்தும்,அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக விடிய திமுக அரசு அப்பகுதி மக்கள் நீரோடையை கடப்பதற்கு புதிய பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.