மயிலத்தில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-13 06:15 GMT

காத்திருப்பு போராட்டம் 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்துக்குட்பட்ட 10 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் முருகன், துணை தலைவர் முத்துவேல், ஒன்றிய செயலாளர் பாவாடை, ஒன்றிய பொருளாளர் அங்கமுத்து மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்கப் படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News