திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட மாற்றுத்திறனாளிகள் முடிவு

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி வெற்றிக்கு பாடுபட மாற்றுத்திறனாளிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. 

Update: 2024-03-21 00:37 GMT

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி வெற்றிக்கு பாடுபட மாற்றுத்திறனாளிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.


தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், தஞ்சை மாநகரக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை, துணைத்தலைவர் ராமு தலைமையில் நடைபெற்றது. இதில் கே.மோகன், சரவணன், பிரசாந், ராதாகிருஷ்ணன், ராஜமுருகன், பிரேமா, காஞ்சனா, புஷ்பவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.  வேலை அறிக்கையை நகரச் செயலாளர் சி.ராஜன் வாசித்தார். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு, "நகரத்தில் உள்ள 51 வார்டுகளிலும் சங்க அமைப்பை உருவாக்குவது , நகரத் தலைவராக செயல்பட்டு வந்த கே.குமார், நமது சங்க ஸ்தாபன நடைமுறைகளை மீறி செயல்பட்டதால், அவரை சங்க செயல்பாடுகளில் இருந்து ஆறு மாத காலம் தற்காலிகமாக நீக்கி வைப்பது என்றும், அப்படி அதையும் மீறிய வகையில் அவருடைய செயல்பாடு இருந்தால் முழுமையாக சங்கத்திலிருந்து விடுவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதோடு இந்த இடைப்பட்ட காலத்தில் சங்க நடைமுறைகளை கவனிப்பதற்காக துணைத் தலைவராக செயல்பட்டு வந்த பிரேமா பொறுப்பு தலைவராக இருந்து கவனிக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டும், நமக்கு பக்கபலமாகவும் இருந்துவருகிற இந்தியா கூட்டணியின் சார்பாக தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு சேகரிப்பது" என்றும் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News