விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Update: 2023-11-21 03:46 GMT
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை வழங்க வேண்டும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு இலவசமாக வழங்கிய பெட்ரோல் ஸ்கூட்டரை காரணம் காட்டி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க மறுப்பதை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைச்செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய தலைவர் அண்ணா துரை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், திருநாவுக்கரசு, பூபாலன், கவுரி, காசிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.