10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்கள் வேதனை - விஜய் வசந்த் பிரசாரம்

ஏழை மக்களை வஞ்சித்து பணக்கார முதலாளிகளான அதானியையும் அம்பானியையும் வாழ வைக்க கார்ப்பரேட்டுக்கு துணை போகும் பாரதிய ஜனதா அரசை தூக்கி ஏறிய வேண்டும் என பிரசாரத்தின் போது காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பேசினார்.;

Update: 2024-04-14 05:32 GMT

விஜய் வசந்த் பிரசாரம் 

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குளச்சல் தொகுதிக்குட்பட்ட திக்கணங்கோடு சந்திப்பில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். , சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ , மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்வசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.        

Advertisement

அப்போது விஜய் வசந்த் பேசுகையில், :-  ஏழை மக்களை வஞ்சித்து பணக்கார முதலாளிகளான அதானியையும் அம்பானியையும் வாழ வைக்க கார்ப்பரேட்டுக்கு துணை போகும் பாரதிய ஜனதா அரசின் பத்தாண்டுகள் ஆட்சியில் மக்கள் நாளுக்கு நாள் பல்வேறு வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்விக் கடனையும் விவசாயிகளின் கடன்களையும் கண்டு கொள்ளாத இந்த பாரதிய ஜனதா அரசு அதானிக்கும், அம்பானிக்கும்,  கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.  இந்த அரசை தூக்கி எறிய வேண்டும் என்று அவர் பேசினார்.

Tags:    

Similar News