குமரி மாவட்டத்தில் ஜூன் 8- ல் மக்கள் நீதிமன்றம்

குமரி மாவட்டத்தில் ஜூன் 8ஆம் தேதி சட்டப்பணிகள் குறித்து மக்கள் நீதிமன்றம் கூடுகிறது.

Update: 2024-05-15 06:39 GMT
குமரி மாவட்ட நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி ஜூன் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்' "கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காண்பதற்காக ஜூன் 8 ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் நிறைவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில், பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை, பூதப்பாண்டி நீதிமன்றங்களில் இந்த மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெறும். சாலை விபத்துகளில் இழப்பீடு வழங்குவது தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகள், உரிமையியல் வழக்குகள், உரிமையியல் மேல் முறையீட்டு வழக்குகள், காசோலை மோசடி, மணவிலக்கு தவிா்த்து குடும்ப நல வழக்குகள், இதர பொதுபயன்பாடு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.  

இந்த மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்று வழக்குகளை நிறைவு செய்து கொள்வது தொடா்பாக வழக்காடுபவா்களோ அல்லது அவா்களது வழக்குரைஞா்களோ மே 24 ஆம் தேதிக்குள் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நேரிலோ அல்லது 04652 291744 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Tags:    

Similar News