தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 467 மனுக்கள் பெறப்பட்டன.
Update: 2024-01-30 07:20 GMT
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் 'கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு 8 - கிராம் எடையுள்ள தங்கநாணயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார். மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 467 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.