மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து - ஆட்சியர் பிருந்தா தேவி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளவரை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-18 05:55 GMT

ஆட்சியர் பிருந்தா தேவி

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளவரை நடைபெறாது. அதேபோன்று, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள், விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலக தரைதளத்தில் வைக்கப்பட்டு உள்ள பெட்டியில் போடலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News