சாக்கடை கால்வாயில் குடிநீர் மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் விடுத்த கோரிக்கை
சங்ககிரி அருகே சாக்கடை கால்வாய் குடிநீர் மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் படித்த கோரிக்கை...
Update: 2024-02-17 09:43 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் தேவூர் பேரூராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் 9 வார்டு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் பேரூராட்சி சார்பில், மக்கள் பயன்பாட்டிற்காக சாலையோரம் குடிநீர் குழாய் அமைத்து காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படு வருகிறது. ஆனால் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக அமைக்காததால் குடிநீர் குழாயை சுற்றி சாக்கடை கழிவுநீர் செல்கிறது. அந்த சாக்கடை கால்வாயிலேயே அப்பகுதி பெண்கள் குடங்களை வைத்து தண்ணீர் பிடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இது குறித்து தேவூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சாலை ஓரத்தில் சாக்கடை கால்வாயில் செல்லும் குடிநீர் குழாயை உயர்த்தி பொதுமக்களுக்கு முறையான காவிரி குடிநீர் வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.