சேலம் ஏற்காட்டில் மிளகு அறுவடை பணி தீவிரம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மிளகு அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-02-14 09:46 GMT


சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மிளகு அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.


சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மிளகு அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மிளகு சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலையில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மிளகு அறுவடை செய்யப்படும். நடப்பாண்டு ஜூனில் விவசாயிகள் மிளகை சாகுபடி செய்தனர்.

மிளகு கொடிகள் மரங்களில் படரும் நேரத்தில் நல்ல மழை பெய்ததால், செடிகள் நன்கு வளர்ந்துள்ளது. இதனால் மிளகு செடியில் காய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், நடப்பாண்டில் மிளகு நல்ல மகசூல் தரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஏற்காட்டை சேர்ந்த மிளகு விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்காடு, கொல்லிமலையில் மிளகு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஏற்காட்டில் விளையும் மிளகு காரம் மிகுந்தது. இங்கு அறுவடை செய்யும் மிளகு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. ஆண்டுக்கு 6 ஆயிரம் டன்னுக்கு மேல் மிளகு விளைச்சல் தருகிறது. ஒரு கிலோ 600 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டு நல்ல மழை பெய்துள்ளதால் மகசூல் அதிகரித்துள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags:    

Similar News