அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை

பெரம்பலூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பிரம்மோற்சவ விழாவின், முக்கிய நிகழ்வான மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மடி ஏந்தி வழிபாடு செய்தனர்.

Update: 2024-05-09 03:27 GMT

பெரம்பலூர் கடைவீதி பகுதியில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் பிரம்மோற்சவவிழா கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது, கடந்த மே- 3 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.அதனைத்தொடர்ந்து சுவாமி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். அதன் தொடர்ச்சியாக மே 7ம் தேதி அம்மன் குறத்தி வாகனத்திலும், வீரபத்திரர் குதிரைவானத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து முக்கியவீதிகளின் வழியாக சுவாமி திருவீதிஉலா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மே - 8ம் தேதியான இன்று மயான கொள்ளை நிகழ்வு மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள மயானத்தில் அங்காளம்மன் மண் சிலை உருவாக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து கிடாவெட்டி ரத்த அன்னம் படையல் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு படையிலிட்ட அன்னத்தை குழைந்தை பேறு இல்லாதவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது அதே போல் குழந்தை பாக்கியம் கிடைத்தவர்களும் பிரசாதத்தை பெற்றுக்கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். .இதனைத்தொடர்ந்து காளி வேடமிட்ட நபர்கள் முறத்தால் பக்தர்களை அடித்தனர், இந்த முறத்தால் அடி வாங்கினால் பில்லி சூனியம். உள்ளிட்டவைகள் விலகும் என்ற ஐதீகம் இருப்பதால் பக்தர்கள் முறத்தால் அடி வாங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்தருளி, திருவீதி உலா நடைபெற்றது. மேலும் தொடர்ந்து அக்னிமிதித்தல், திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகளும், 11ந்தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கத இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.

Tags:    

Similar News