பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நியமனம்

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக வேப்பந்தட்டை ஜெகதீசனை நியமனம் செய்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;

Update: 2024-02-29 08:26 GMT

ஜெகதீசன்

பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளராகப் பணியாற்றி வரும் குன்னம் இராஜேந்திரன் , தனது உடல்நலக்குறைவு காரணமாக, தான் வகித்து வரும் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதால், திமுக கழகப் பணிகள் செவ்வனே நடைபெற, வேப்பந்தட்டை சேர்ந்த ஜெகதீசன் பெரம்பலூர் மாவட்டக் திமுக கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். எனவே ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என திமுக தலைமைச் கழகத்தில் இருந்து தி.மு.க.பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News