பெரம்பலூர் வருவாய் துறை அலுவலர் சங்க மாநாடு
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில், தமிநாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட மையம் சார்பில் 60ம் ஆண்டு வைர விழா மாநாடு நடைபெற்றது.
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் , தமிநாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் பெரம்பலூர் மாவட்ட மையம் சார்பில் 60-ம் ஆண்டு வைர விழா மாவட்ட மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாரதி வளவன் தலைமையில் நடைபெற்ற, இந்த மாநாட்டில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கையை எடுத்துரைத்து மாநாடு சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மாநில பொருளாளர் சோமசுந்தரம், மாவட்டத் துணைத் தலைவர் துரைராஜ் சட்ட ஆலோசகர் சிவா மற்றும் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் குமரி அனந்தன், ஆகியோர், முன்னிலை ஏற்று ஒருங்கிணைத்தனர், இந்த மாவட்ட மாநாட்டில் வருவாய்த் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வருவாய் துறையில் ஆண்டுதோறும் வட்டாட்சியர் நிலையில் இருந்து துணை ஆட்சியர் பணி உயர்வு அளித்து பட்டியல் வெளியிட வேண்டும், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், வருவாய்த் துறையில் அனைத்து நிலைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் மாநாடு நிறைவுறை வழங்கினார் மாவட்டத் துணைத் தலைவர் கதிர் நன்றி உரையாற்றினார். இந்த மாவட்ட மாநாட்டில் நிர்வாகிகள் மஞ்சுளா, சரவணன், கார்த்திகேயன் விஜயன் சத்திய பால கங்காதரன், மணிகண்டன், ,மனோகரன் மற்றும் பல்வேறு அரசுத்துறை மற்றும் ஓய்வு பெற்ற சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.