கல்லல் அருகே பெரிய நாயகி அம்மன் கோவில் திருவிழா:மாட்டுவண்டி பந்தயம்
கல்லல் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே பனங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவுகளுக்கு 8 கிமீ தொலைவும், சிறிய மாடுபிரிவுகளுக்கு 6 கிமீ தொலைவும் பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.
இதில், பெரியமாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 32 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. பெரிய மாடு மற்றும் சிறிய மாடு பிரிவுகளில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் விழாக்குழுவினரால் ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விறு விறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தை பனங்குடி, நடராஜபுரம், கண்டுப்பட்டி, வெற்றியூர், துவரிப்பட்டி, செங்குளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சாலையில் இரு மருங்கிலும் நின்று கண்டு களித்தனர்.