பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா !

பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2024-07-12 04:56 GMT

 கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பவானி அம்மன் திருக் கோவிலில் கும்பாபிஷேக விழா யாக கலச பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்றது.

கலச நீரானது மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் கோபுர கலசங்களுக்கும் பவானி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் கலச நீர் கொண்டு சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பத்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பவானி அம்மனை தரிசனம் செய்தனர். ரூபாய் 159 கோடி பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று இன்று நடந்த கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோபுர கலசத்திற்கும் பிரகார மூர்த்தங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்று நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வந்த புனித தீர்த்தத்தை பக்தர்கள் மீது தெளித்தனர் . பெரியபாளையம் கோவிலில் பக்தர்கள் பாதுகாப்பிற்கு செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து 700 போலீசார் கோவில் வளாகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று கோவிலுக்கு முகூர்த்த நாள் என்பதால் திருமணம் செய்து கொள்ள வந்த திருமண ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் தவித்தனர் மேலும் வேறு வழியின்றி ஆரணி ஆற்றின் கரையில் நின்று தாலி கட்டிக் கொண்டு ஆரணி ஆற்றின் கரையிலேயே இருந்து கோபுரத்தை நோக்கி விழுந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Tags:    

Similar News