பெரியாா் சிலையை சேதப்படுத்திய வழக்கில் அர்ஜுன் சம்பத் ஆஜர்

ஈ.வெ.ரா. பெரியாா் சிலையை சேதப்படுத்தியது தொடா்பான வழக்கு விசாரணைக்கு இந்து மக்கள் கட்சித்தலைவா் அா்ஜுன் சம்பத் கோர்ட்டில் ஆஜரானாா்.

Update: 2023-12-28 01:29 GMT

பெரியார் சிலை 

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ராஜகோபுரம் எதிரே அமைக்கப்பட்டிருந்த பெரியாா் சிலையை 2011 ஆம் ஆண்டு சேதப்படுத்தியது தொடா்பாக ஸ்ரீரங்கம் போலீஸாா், இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன்சம்பத், அக்கட்சியின் துணைத் தலைவா் ராகவன், மாணிக்கம், செந்தில்குமாா், ராஜசேகா், சுஜித், முரளி ரெங்கன், கிருஷ்ணமாச்சாரி ஆகிய 8 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி மீனாசந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அா்ஜுன் சம்பத், ராகவன், ஆகியோா் ஆஜராகினா். மேலும் சில சாட்சிகள் வராததால் இந்த வழக்கு ஜனவரி மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் ஹேமந்த் ஆஜரானாா்.
Tags:    

Similar News