பெரியார் பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சேலம் பெரியார் பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான சிறப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

Update: 2024-05-01 03:00 GMT

சேலம் பெரியார் பல்கலைக்கழகம்  

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இணைவு பெற்ற கலை அறிவியல் கல்லூரிகளில் பயின்ற இளங்கலை மற்றும் முதுகலை மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு தேர்வு விண்ணப்பித்து கடந்த மார்ச் மாதம் தேர்வுகள் நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் பயின்ற கல்லூரியின் மின்னஞ்சல் வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும்www. Periyar University.ac.in என்ற பெரியார் பல்கலைக்கழக இணையதள முகவரியிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News