பெரியார் பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு அறிவிப்பு

Update: 2024-02-29 04:55 GMT
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படித்து சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு கால அட்டவணையை சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி வருகின்ற மார்ச் 12ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை அணைத்து சிறப்பு தேர்வுகளும் பெரியார் பல்கலைகழகம் எதிரே உள்ள பத்மவாணி தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது என்றும், இந்த சிறப்பு தேர்வுக்கான கால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் பெற்று கொள்ளலாம் எனவும், தேர்வு நுழைவுச் சீட்டை தாங்கள் பயின்று வரும் கல்லூரியில் வழியாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News