அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர் உயிரிழப்பு

மேட்டூரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-05-11 08:20 GMT

 மேட்டூரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேட்டூர் அண்ணா நகர் பகுதி சாலையோரத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மேட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து போன நபர் 13-வது வார்டு கூலி லைன் பகுதியை சேர்ந்த முருகன் (52). என்பது தெரிய வந்தது.

கூலி வேலை செய்து வந்த முருகன் மது அருந்தும் பழக்கம் கொண்டவர் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை அடுத்து முருகனின் சடலம் அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News