குப்பைக்கு வைத்த போது தீயில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு
இண்டூர் தளவாய்அள்ளியில் குப்பைகளை சேகரித்து தீ வைத்த போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-05-28 13:08 GMT
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இண்டூர் தளவாய்அள்ளியைச் சேர்ந்தவர் தேவராஜ் கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 13ம் தேதி, தனது வீட்டின் முன்பு இருந்த குப்பைகளை சேகரித்து தீ வைத்தார்.
அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு, தீயில் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, இண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, அவர் இன்று உயிரிழந்தார். இதுபற்றி இண்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.