டூவீலர் திருடியவர் நபர் - வாகனங்கள் பறிமுதல்
குமாரபாளையத்தில் டூவீலர் திருடிய நபர் கைது செய்யப்பட்டு இரண்டு டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன;
Update: 2024-01-11 14:47 GMT
மணி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் டிச. 21, 26 நாட்களில் பவானி சுரேஷ், 41, குமாரபாளையம் சூர்யநாராயணன், 62, ஆகிய இருவரின் டூவீலர்கள் திருடப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்தனர். நேற்று மாலை 04:00 மணியளவில், குமாரபாளையம் காவேரி நகர், சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் சந்தியா, தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதிவு எண் இல்லாமல் வந்த டூவீலரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது குமாரபாளையத்தில் திருடப்பட்ட வாகனம் என்பதும், அவர் ஈரோடு மாவட்டம், வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்த மணி, 55, என்பதும் தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார், இவரிடமிருந்து இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.