டாஸ்மாக் கடையில் சரக்கு திருடியவர்கள் கைது

அரியலூர் மாவட்டம், கல்லூர் அருகே அரசு மதுபான கடையில் திருடியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-01-27 09:03 GMT

சரக்கு விற்றவர் கைது

அரியலூர் மாவட்டம், கல்லூர் பாலம் அருகே அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த கடையின் விற்பனையாளர்கள் கடந்த 14 ஆம் தேதி இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதியன்று மதுபான கடையின் பூட்டு உடைக்கபட்டு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கீழப்பழூவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 1152 மதுபாட்டில்களை திருடியவர்கள் யார் என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தளபதி, எபினேசர் மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பது தெரியவந்தது. இதனையடுத்து தளபதி மற்றும் மாரிமுத்துவை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 672 மதுபாட்டில்கள் மற்றும் 480 மதுபாட்டில்களை விற்பனை செய்த 67,200 ரூபாய் ரொக்கபணம், 3 அரிவாள்கள், 2 கடப்பாரைகள் மற்றும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள எபினேசர் என்பவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News