மாற்றுத்திறனாளிகள் நலத்துறை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள இ சேவை மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-14 07:35 GMT

ஆட்சியர் லட்சுமிபதி

தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 திட்டங்களுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இணையதள முகவரி: https://www.tnesevai.tn.gov.in/citizen/portallogin.aspx. திட்டங்கள் வாரியாக தேவைப்படும் ஆவணங்கள் உதவித்தொகை: விண்ணப்பதாரரின் புகைப்படம், மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையான அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை UDID அட்டை நகல், முந்தைய வருடம் பயின்ற வகுப்பின் தேர்ச்சி மதிப்பெண் சான்று (9-ஆம் வகுப்பு அதற்கு மேல் பயில்பவர்களுக்கு மட்டும்) வங்கி புத்தகம், தற்போது பயின்று வரும் கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்ற சான்று.

மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை: Disability Type Eligibility Percentage Locomotors Disability (LD) Cerebral Palsy (CP), Dwarfism (Dw) Above 75% Muscular Dystrophy (MD). Leprosy Cured (LC). Chronic Neurological Conditions (CNC) Minimum 40% Intellectual Disability (ID) Minimum 40% மேற்கண்டவாறு பாதிப்புடைய நபர்கள் மட்டும் மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விண்ணப்பதாரரின் புகைப்படம், UDID அட்டை நகல், வங்கி இணை கணக்கு புத்தகம், பெற்றோர்/ பாதுகாவலரின் புகைப்படம், பெற்றோர் / பாதுகாவலரின் ஆதார் அட்டை.

3. Bank Loan ( வங்கிக் கடன் விண்ணப்பம்) மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விண்ணப்பதாரரின் புகைப்படம், UDID அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம்.

4. Marriarge Assistance ( திருமண நிதி உதவித்தொகை) திருமண புகைப்படம், திருமண அழைப்பிதழ், திருமண பதிவு சான்று, தம்பதியின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மணமக்களின் கல்வி சான்று மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, விண்ணப்பதாரரின் புகைப்படம், UDID அட்டை நகல், வங்கி இணை கணக்கு புத்தகம், சுய சான்றொப்பமிட்ட முதல் திருமண சான்று, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி அல்ல ( நல்ல நிலையில் உள்ளவர்கள் என அரசு மருத்துவரிடம் பெற்ற சான்று).

5. Aids and Appliances (அனைத்து உதவி உபகரணங்கள்) விண்ணப்பதாரரின் புகைப்படம், மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, UDID அட்டை நகல். மேற்காணும் திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள இசேவை மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News