சித்ரா பவுர்ணமியையொட்டி பெருமாள் தேரோட்டம்

கள்ளக்குறிச்சியில் சித்ரா பவுர்ணமியையொட்டி பெருமாள் தேரோட்டம்.

Update: 2024-04-24 05:52 GMT

பெருமாள் தேரோட்டம்

கள்ளக்குறிச்சியில் சித்ரா பவுர்ணமியையொட்டி, பெருமாள் தேரோட்டம் நேற்று நடந்தது. திருப்பதியின் ஏற்றம் கொண்ட கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் ஏப்., 14ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் வரை காலை, மாலை இரு வேளைகளில் பெருமாள் திருவீதியுலா நடந்தது. நேற்று அதிகாலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம், பசுபூஜை ஆகியவற்றுக்குப்பின் சீதேவி, பூதேவி, பெருமாள் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்திற்குப்பின் மந்தைவெளியில் உள்ள திருத்தேருக்கு சுவாமிகளை எழுந்தருள செய்தனர். மண்டகப்படி பூஜைகள் நடத்தப்பட்டது. மங்கல வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷங்களை எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகள் வழியாக திருத்தேர் பவனி நடந்து, நிலையை மாலை வந்தடைந்தது. இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளினார்.
Tags:    

Similar News