சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாணம்
சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது
கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவிலில், சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் 90 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி பெருமாள் தாயார் திருக்கல்யாண வைபவம் இரவு கோலாகலமாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவில் ஊராட்சியில் அருள் பாலிக்கும் சௌந்தரவல்லி தாயார் சமேத சௌந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானதாகும். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் சுமார் 90ஆண்டுகளுக்கு இன்று நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி,இரவு பெருமாள் தாயார் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் தட்டுகளில், பல்வேறு சீர்வரிசைகளை கொண்டு வந்தனர். பின்னர் பாரம்பரிய வழக்கப்படி பல்வேறு வைபவங்களை நடத்தி, சிறப்பு யாகத்துடன் பட்டாட்சியர்கள் தங்க மாங்கல்yam தாயாருக்கு அணிவித்து திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்..