பாலம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து மனு
தண்ணீர் வரத்து இல்லாத இடத்தில் பாலம் கட்டப்படுவதால் நிதி வீணடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்;
Update: 2023-12-25 02:43 GMT
பாலம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து மனு
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி பகுதியைச் சோந்த விவசாய சங்க நிா்வாகி அழகியண்ணன் உள்ளிட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
சத்திரப்பட்டி கோபாலபுரம் பகுதியில் திண்டுக்கல்-பழனி பிரதான சாலையோரமாக ஊராட்சி நிா்வாகம் சாா்பில், மழைநீா் வடிகால் கட்டப்பட்டது. இந்த நிலையில், திண்டுக்கல்-பழனி பிரதான சாலையைக் கடந்து வடக்குப் பகுதிக்கு தண்ணீா் செல்லும் வகையில், சுமாா் ரூ.10 லட்சத்தில் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.தண்ணீா் வரத்து இல்லாத இடத்தில் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. எனவே, பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.