வள்ளியூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு

வள்ளியூர் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் கேசவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்விவசாயிகள் சங்கம் மனு அளித்தனர்.

Update: 2024-05-15 04:49 GMT
தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது

 விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் அருகே உள்ள வள்ளியூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கணக்கு வைத்திருப்பதாகவும் இந்த கூட்டுறவு சங்கம் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த நிலையில் , கடந்த சில மாதங்களாக விவசாயிகள் சேமித்து வைத்திருந்த சேமிப்பு கணக்கு மற்றும் அடகு வைத்துள்ள நகைகள் எடுக்க சென்றால் பணம் மற்றும் நகை இல்லை என கூறி வருவதாகவும் இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும் , இந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளராக பணிபுரியும் கேசவன் மற்றும் அவருடன் பணிபுரியும் நபர்கள் கோடிக்கணக்கான பணத்தை ஊழல் செய்திருப்பதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும் , மேலும் இது குறித்து மனு அளிக்க கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரை சந்திக்க வரும்பொழுது அவர் விவசாயிகளை சந்திக்க காலம் தாமதம் செய்து விவசாயிகளை அலைக்களிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

   இதன் காரணமாக கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தை விவசாயிகள் பூட்டு போட அந்த இடத்திற்கு வந்தனர் இதை அறிந்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை எடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர் . மேலும் ஒரு வார காலத்திற்குள் சம்பந்தந் ப்பட்ட நபர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News