குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி மனு!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2024-05-13 14:15 GMT
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு  காண வேண்டி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு .  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  சேரன் மாநகர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் சார்பாக தலைவர் தென்னவன் , செயலாளர் மணிகண்டன் , பொருளாளர் நாகராஜன் , துணைச் செயலாளர் செல்லத்துரை , ஆகியோர் தலைமையில்   குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி மனு அளித்தனர் அந்த மனுவில் ...... சேரன் மாநகர் முதலிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட  பகுதியில்  150 குடும்பங்கள் வசித்து வருவதாகவும்  எங்கள் நகரில்  15 வருடங்களாக  குடிநீர் தேவைக்கு  ஒரே ஒரு ஆழ்துளை கிணறு மட்டுமே உள்ளது என்றும்  அடிக்கடி அது பழுதாகி விடுவதால்  பெரும்பாலான மக்கள் லாரி தண்ணீரையே வாங்கி உபயோகித்து வருகிறோம் .. தற்சமயம் ஒரு மாதம் காலமாக  போர்வெல் கிணற்றில் தண்ணீர் இறைக்க பயன்படுத்தப்படும் மோட்டார் அடிக்கடி  பழுதாகி  விடுவதாகவும்  அதியவாசிய தேவைகளுக்கு தண்ணீர்  இன்றி மிகவும்  மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர் .. தடையில்லாமல் குடிநீர் எங்களுக்கு கிடைக்க வேண்டும்  எங்கள் கோரிக்கையை  நிறைவேற்ற வேண்டும் என்று அந்த  மனுவில்  தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News