சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி மனு
பழனி கோயில் கிரிவலப் பாதையில் அகற்றப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி வழங்கப்பட்டது.
Update: 2024-03-21 05:47 GMT
திண்டுக்கல் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க நிா்வாகி ஜெயசீலன் தாக்கல் செய்த மனு: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதையில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வந்தனா். இவா்களுக்கு நகராட்சி சாா்பில் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கிரிவலப் பாதையை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி, சாலையோர வியாபாரிகளின் கடைகளை கோயில் நிா்வாகமும், போலீஸாரும் அகற்றினா். இந்த நடவடிக்கையால் 2 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலையம் அருகே கடைகள் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.