கிள்ளியூரில் விளையாட்டு மைதானம் அமைக்க மனு

கிள்ளியூரில் விளையாட்டு மைதானம் அமைக்கும்படி எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஒரு மனு வழங்கியுள்ளார்.

Update: 2024-02-03 07:36 GMT
 கிள்ளியூரில் விளையாட்டு மைதானம் அமைக்கும்படி எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஒரு மனு வழங்கியுள்ளார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னை முகாம் அலுவலகத்தில் கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார் சந்தித்து ஒரு மனு  வழங்கினார். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-        குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு நகராட்சி கலிங்கராஜபுரம் பகுதியில் புல எண் 451/2 -ல்  ஒரு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த புறம்போக்கு நிலத்திற்கு பந்தடிக்களம் என்ற பெயரும் உண்டு. தற்போது இந்த புறம்போக்கு நிலத்தை அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகிறார்கள்.        இங்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் இதுவரையிலும் அரசு சார்பில் செய்யப்படவில்லை. இந்த பகுதியில் அரசு சார்பில்  மிகச் சிறந்த விளையாட்டு மைதானம் அமைத்தால், இப்பகுதி மற்றும் சுற்றுவட்டார் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயனடைவார்கள்.       ஆகவே க லிங்கராஜபுரம் பந்தடி களத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஒரு விளையாட்டு மைதானம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News