தாராபுரம் பகுதியில் கோழிப் பண்ணைகளை ஆய்வு செய்யக் கோரி மனு

கோழி பண்ணைகளிலிருந்து பரவி வரும் பறவை காய்ச்சலை தடுக்கவும், கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்ய கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-04-29 08:40 GMT

மனு அளித்தவர்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து பரவி வரும் பறவை காய்ச்சலை தடுக்கவும் கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்ய வலியுறுத்தியும் தமிழ் புலிகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் குண்டடம் காளிமுத்து தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ச்சியாக கோழிகளிலிருந்து பரவக்கூடிய பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் அதிக அளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோழி இறைச்சிகளை சாப்பிடுவதால் உடலில் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குண்டடம்,மூலனூர் ,அலங்கியம் ,

தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகளில் இருந்து அதிக அளவில் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாகவும் கோழி இறைச்சிகளை மக்கள் சாப்பிடும் போது பொதுமக்களுக்கு அதிக அளவு பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது.ஆகவே உடனடியாக தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கின்ற கோழிப் பண்ணைகளை ஆய்வு செய்து நோய் தொற்று இருக்கும் கோழிப்பண்ணைகளில் கோழிகளை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்றுக்கொண்ட தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் மேலும் மாநில அமைப்பு செயலாளர் முகிலரசன், மேற்கு மண்டல துணை செயலாளர் ஒண்டிவீரன், தாராபுரம் நகர செயலாளர் தொண்டபாணி, தன்ராஜ், பகவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News