ரேஷன் கடைகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Update: 2023-11-20 09:13 GMT

மனு அளித்தவர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூரில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி விற்கப்படும் உணவுப் பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலக்கெடு தேதி குறிப்பிடப்படாததை சுட்டிக்காட்டி திமுக நிர்வாகி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். திருப்பூர் மாவட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட கூட்டுறவுத் துறையில் நுகர்வோர் பொருட்கள் கூட்டுறவு பண்டக சாலையின் சுய சேவை பிரிவு வளர்மதி கூட்டுறவு அங்காடி மூலம் அரசு அனுமதி வழங்காத பொட்டுக்கடலை உள்ளிட்ட மளிகை பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும்,

அவ்வாறு  விற்கப்படும் பொருட்களில் உற்பத்தி செய்யப்பட்ட தேதி மற்றும் காலக்கெடு தேதி , விலை உள்ளிட்ட எந்த ஒரு விவரமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால் ரேஷன் கார்டு தாரர்களுக்கு உடல் உபாதை உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் , தனியார் நிறுவனங்கள்  இது போன்ற எந்த விவரமும் இல்லாமல் பொருட்களை  விற்பனை செய்தால் அந்நிறுவனத்திற்கு  மாவட்ட வருவாய் அலுவலக நீதிமன்றம் மூலம் வழக்கு பதிவு செய்து இரண்டு லட்சம் அபராதம் விதிப்பது போல

கூட்டுறவு துறைக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வழியுறுத்தி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொட்டுக்கடலை பாக்கெட்டை மாலையாக அணிந்து வந்து தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்றக் கூட்டமைப்பின் மாநில இணைப் பொதுச் செயலாளர் சரவணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

Tags:    

Similar News