ஜாதி சான்று வழங்கக்கோரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

பர்கூர் மலை கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் தங்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.;

Update: 2024-06-25 04:44 GMT
ஜாதி சான்று வழங்கக்கோரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

மனு அளிக்க வந்த மாணவர்கள் 

  • whatsapp icon
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலை கிராமங்களில் ஈரெட்டி,மின்தாங்கி, கல்வாரை,எப்பதாம்பாளையம் மற்றும் என்ன மங்கலம் ஊராட்சி மலையனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இவர்கள் இந்து மலையாளி (ST) ஜாதி சான்று கேட்டு விண்ணப்பித்தனர்,ஆனால் இதுவரை வழங்கபடவில்லை. இதனால் பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்கால படிப்பு தடைப்படுவதாகவும் , அரசின் நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் இருப்பதால் ஜாதிசான்று வழங்க வலியுறுத்த வேண்டும் என்று 100-க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் அப்பகுதி மக்கள் சேர்ந்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
Tags:    

Similar News