குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்க கிராம மக்கள் மனு

பெரும்பாக்கம் கிராம மக்கள் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்க மனு அளித்துள்ளனர்.

Update: 2024-03-13 04:20 GMT

 மனு அளித்த கிராம மக்கள்

கள்ளக்குறிச்சியில் சுத்திகரிப்பு கருவி அமைத்து குடிநீர் விநியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர். பெரும்பாக்கம் கிராம மக்கள் கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் அளித்த மனு: உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இக்கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் உப்பு நீராக மாறியுள்ளதால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். நீரிழிவு நோய் மற்றும் கிட்னி பாதிப்பு நோயால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தங்கள் நேரில் ஆய்வு செய்து, நிரந்த தீர்வாக குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News