வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கூடுதல் ஆட்சியரிடம் எம்எல்ஏ கோரிக்கை மனு
ஆரணி சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த மனுவை எம்.எல். ஏ சேவூர் ராமச்சந்திரன் கூடுதல் ஆட்சியரிடம் வழங்கினார்.
Update: 2024-01-04 04:55 GMT
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் இராமச்சந்திரன் ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது பொதுமக்கள் கோரிக்கை வைத்த பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான மனுக்களையும், பல வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான மனுக்களையும் கூடுதல் ஆட்சியர் ரீஷப்பிடம் அளித்தார். அப்போது ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றிய குழு துணை தலைவர் வேலாயுதம்,ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயபிரகாஷ், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.