ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கரியபெருமாள்புதூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மனு அளித்தனர்,

Update: 2024-01-19 02:45 GMT
 நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம் , சிவநாயக்கன்பட்டி, கரியபெருமாள்புதூரில் (கரட்டுப்புதூர்) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மனு அளித்தனா். இதுகுறித்து ஜல்லிக்கட்டு விழா குழுவினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.. நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கும் அரசாணையில் உள்ள ஊர்களின் பட்டியலில் எங்களது ஊரும் இடம் பெற்றுள்ளது. பாரம்பரியமாக நடைபெறும் ஜல்லிக்கட்டை வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி நடத்த அனுமதி வழங்க வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News