இராசிபுரம் ஒரு வழிப்பாதையை மாற்ற எம்.பி.யிடம் மனு
இராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வெளி செல்வதில் ஒரு வழிப்பாதையை பழைய முறையில் மாற்ற வேண்டி எம்பி இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-24 14:22 GMT
எம்பியிடம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அனைத்து பேருந்து ஓட்டுனா்கள், நடத்துனா்கள் மற்றும் இராசிபுரம் நகர பொது மக்கள் சார்பில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.ராஜேஸ்குமார் இடத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
. எனவே தாங்கள் பேருந்து ஓட்டுனா் மற்றும் நடத்துனா் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலனை மையமாகக் கொண்டு பழைய முறைப்படி ஒரு வழிப்பாதையை மாற்றி அமைத்து பேருந்து பயணத்தை இலகுவாக வேண்டும் என அவர்கள் எம்பி இடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதேபோல் ராசிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.