விருத்தாச்சலம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மனு
விருத்தாச்சலம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மனு அளித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-30 12:02 GMT
மனு அளித்த மக்கள்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தில் நிலவும் பல்வேறு அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் கிளை செயலாளர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன் தட்சிணாமூர்த்தி மற்றும் கிளை உறுப்பினர்கள் வெங்கடேசன், இளையராஜா, பரமசிவம், பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.