மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் மனு

காங்கேயம் கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்துபொதுமக்கள் சார்பில் தாசில்தார் மயில்சாமி இடம் புகார் மனுவை கொடுத்தனர்.

Update: 2024-03-19 12:06 GMT

காங்கேயம் கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்துபொதுமக்கள் சார்பில் தாசில்தார் மயில்சாமி இடம் புகார் மனுவை கொடுத்தனர்.


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கரூர் தேசிய நெடுஞ்சாலயில் தனியார் பெட்ரோல் பங்க் அடுத்த வாய்க்கால் ஓடை அருகே புதிய மதுக்கடை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதனை திறகக்க்கூடாது என அப்பகுதி பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடையை முற்றுகையை நடத்தினர்.

இதனை அடுத்து அப்பகுதியில் போலிசார்‌ குவிக்கப்பட்டனர். மேலும் இப்பகுதிக்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் அவரது தலைமையிலான போலிசார் பொதுமக்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் கடையை திறக்கப் போவதில்லை என உறுதி அளித்ததின்‌ பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.   

இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் பொதுமக்கள்‌ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் காங்கேயம் நகர நெடுஞ்சாலை பகுதியில் இந்த மதுபான கடை திறந்தால் அருகில் இயங்கும் பள்ளிக்கும் அதில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் இடையூராக இருக்கும், மது பிரியர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக

பொதுமக்கள் குற்றச்சாட்டுவதோடு பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திறந்தாள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பொதுமக்கள் சார்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பிலும் காங்கேயம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டாச்சியர் மயில்சாமியிடம்‌ மனு அளித்தனர்.

Tags:    

Similar News