தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

பண மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் தரப்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-02-20 05:56 GMT
சிறுசேமிப்புத் திட்டம் என்ற பெயரில் பண மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் தரப்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட தனியாா் நிதி நிறுவனம், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 9 கிளைகள் மூலம் சிறு சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் பொதுமக்களிடம் தினமும் ரூ.100 முதல் ரூ.1000 ரூபாய் வரை பணம் வசூலித்தது. செலுத்தும் அசலுக்கு வட்டியுடன் பணமாகவும், அதன் மதிப்பில் நிலம், வீட்டுமனையாகவும் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனா். இதை நம்பி பலரும் முதலீடு செய்தோம். தற்போது அந்த நிறுவனம் பூட்டப்பட்டுவிட்டது. மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
Tags:    

Similar News