கட்டுமான பணியை உடனே நிறைவேற்ற ஆட்சியரிடம் மனு

கரூர் அருகே ரூ. சுமார் 82 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் அரசு கட்டுமான பணியை உடனே நிறைவேற்ற ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

Update: 2024-02-20 11:42 GMT

ஆட்சியரிடம் மனு அளிப்பு

 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கருப்பத்தூர் ஊராட்சியில் உள்ள வேங்காம்பட்டி, தாளியாம்பட்டி, புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்த்தர்கள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தங்கவேல் -ஐ சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கருப்பத்தூர் ஊராட்சி பகுதியில் 2017 -18ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ. சுமார் 82 லட்சம் மதிப்பீட்டில், சுய உதவி குழுக்களின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு புதிய அரசு கட்டிடம் கட்டும்பணி துவக்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்தப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அதே ஊரைச் சேர்ந்த வடமலை என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனை கேட்டு பணிகளை துவக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறி,

மாவட்ட ஆட்சியரை சந்தித்து பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டனர். கிராம மக்கள் அளித்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் தங்கவேல், நீதிமன்றம் அளித்த உத்தரவை வழக்கறிஞரிடம் கேட்டு தருமாறும், அதனைப் பார்த்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு சம்மதம் தெரிவித்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பின்னர் ஊர் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News