பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 16:19 GMT
மனு அளித்தவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி கே.புதுப்பட்டியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் நாங்கள் 200 க்கும் மேற்பட்டோர் வத்தலக்குண்டு பேரூராட்சி கே.புதுப்பட்டியில் வசித்து வருகிறோம். அங்கு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சுமார் 300 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த இடத்தில் கே. புதுப்பட்டியை சேர்ந்த நாங்கள் 217 பேருக்கு வீட்டுமனை கேட்டிருந்தோம் . இதனை அறிந்த ஆளும் கட்சியை சேர்ந்த தனி நபர் அந்த இடத்தினை மொத்தமாக வேலி போட்டுள்ளார்.. பெண்களான எங்களுக்கு இந்த அரசு மூலம் 2.5 சென்ட் இடம் வழங்க வேண்டும். அதற்கான பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.