தூத்துக்குடியில் மறியல் போராட்டம் : ஜாக்டோ ஜியோ பேரமைப்பு அறிவிப்பு
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் வருகிற 30ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ;
கூட்டமைப்பு நிர்வாகிகள்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் வருகிற 30ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ - ஜியோ பேரமைப்பு அறிவித்துள்ளது.
ஒப்பந்த முறையை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத்திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ பேரமைப்பு 30.01.2024 செவ்வாய்க்கிழமை அன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தூத்துக்குடி பெரியார் சிலை, தமிழ் சாலை எதிரே 30.01.2024 செவ்வாய்க்கிழமை அன்று மறியல் போராட்ட நடைபெற உள்ளது. இதில், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்,
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். ஒப்பந்தம், தற்காலிகம் உள்ளிட்ட முறைகளை கைவிட்டு நிரந்தரப் பணியிடங்களில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது.